ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி 10 கோடி ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அஷ்பாக், ஷாயிகா தம்பதியினர். இவர்களுடன் அஷ்பாக்கின் சகோதரர்களான கைசர் அஹமத், ரபீக் அஹமத், யாசீர் ஆகியோர் ராணிப்பேட்டையிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக தயார் செய்து, அதனை பயன்படுத்தி 5 தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தனித்தனியாக 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் வாங்கி கொண்டு ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது.
இந்தநிலையில், கடந்த 10 மாதங்களாக ஆறு தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒருவர்பின் ஒருவராக குற்றவியல் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் தோல் பொருட்களை பெற்று கொண்டு ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கணவன், மனைவியை கைது செய்த காவல் துறையினர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அவரது சகோதர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்