செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரணையில் சரக்கு வாகனம் திருடப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பீர்க்கன்காரணையை சேர்ந்த கண்ணனும் அமுதவல்லி என்பவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணனின் சரக்கு வாகனம் காணாமல் போனது. கண்ணன் அளித்த புகார் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அமுதவல்லி தனது தம்பி ரேணுவை வைத்து சரக்கு வாகனத்தை திருடிச் சென்றது உறுதியானது. இதனையடுத்து, அமுதவல்லி மற்றும் அவரது தம்பி ரேணு ஆகிய இருவரை கைது செய்த காவல்துரையினர், புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post