மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் 3 ஆயிரத்து 278 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தேர்தலை ஒட்டி, வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் 3 ஆயிரத்து 278 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 249 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், ஆயிரத்து 215 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 972 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை மதிப்புமிக்க பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Discussion about this post