மத்தி மீன்களின் வரத்து அதிகரித்திருப்பதால் வேதாரண்ய மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைபடகுகளில் யாரும் கடலுக்கு செல்வதில்லை. இந்தநிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆட்டுத்துறையில் பைபர் படகுகள் மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் சிக்குகின்றன.
ஒரு கிலோ மத்தி மீன் 100 ரூபாய் வரை விற்பனையாகுகிறது. மேலும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 8 டன் வரை மத்தி மீன்கள் கிடைப்பதால் ஆட்டுத்துறை மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post