வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பறவகைகள், கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள உப்பு கழிவுநீர் கால்வாயில் குவிந்துள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பல்லாயிரம் மயில்கள் தூரம் பயணிக்கும் வெளிநாட்டுப் பறவைகளின் சரணாலயமாக உள்ளது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைந்துள்ள வேடந்தாங்கல். இங்கு கூழைக்கடா, வர்ண நாரை, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறைவைகள் விருந்தினர்களாக வந்து செல்வதும், அவைகளை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதும், விழாக்காலம்போல் காட்சி அளிக்கும்.
இந்த ஆண்டு பருவமழை சரிவரப் பொழியாததால், வேடந்தாங்கல் ஏரி வறண்ட பூமியாக காட்சி அளிக்கிறது. இதனால் பல ஆயிரம் மயில்கள் பயணித்து, இளைப்பார வந்த பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. வேறு வழி இன்றி மாற்று இடத்தை நாடிச்சென்ற பறவைகள், கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள உப்பு கழிவுநீர் கால்வாயில் தஞ்சம் அடைந்துள்ளன. இப்பறவைகள், தண்ணீரில் நீந்திச் செல்வதும், நாட்டியம் ஆடுவதுபோல் காட்சி அளிப்பதும் பார்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.