போதிய மழை இல்லாததால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பாகிஸ்தான், இந்தோனிஷியா, இலங்கை மற்றும் பர்மா போன்ற 18 நாடுகளிலிருந்து பறவைகள் வந்து செல்கின்றன. இரைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டதில் இந்தாண்டு போதியளவு மழை இல்லாததால், ஏரியில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனால் பறவைகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. தற்போது ஆயிரத்து 500 பறவைகள் வந்தாலும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் தங்காமல் திரும்பிச் செல்கின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைவாக இருப்பதால் ஏமாற்றமடைந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
Discussion about this post