கி.பி.1,100 ஆம் ஆண்டில் உருவான சமஸ்தானத்தின் 31-ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்டப்பட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர். ஜமீனுக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உட்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி நேற்று இரவு 9.30 மணியளவில் தனது 89-வது வயதில் காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமீன் தீர்த்தபதி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post