கோவை அரசு பொருட்காட்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல ரகங்களிலான புடவைகளுக்கு பெண்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் காட்டன், கோரா காட்டன், சில்க் காட்டன், வெண்பட்டு, ஜெர்ரி பட்டு ஆகிய ரகங்களில் புடவைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
ஜெர்ரி பட்டு 250 ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல வெண்பட்டு 4 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. வெண்பட்டில் பெண்களை கவரும்வகையில் அதிகளவிலான வடிவமைப்புகள் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. தற்காலங்களில் வெண்பட்டு மற்றும் ஆர்கானிக் புடவைகளை பெண்கள் அதிகளவில் விரும்புவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post