நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
மக்களவையில் தொழில் உறவுகள் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளின் சொத்துரிமையை அங்கீகரிப்பதற்கான சட்ட மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வருமான வரிச்சட்டத் திருத்த மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.மாநிலங்களவையில் சீட்டு நிதி நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இ சிகரெட்களைத் தடை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
Discussion about this post