தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு வரும் 315 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post