வண்டலூர் உயிரியல் பூங்காவில், புதிய வண்ணமயமான கிளிகளின் வரவு, பார்வையாளர்களை ஈர்க்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படும் ஸ்கார்லெட், கேட்டிலைனா, ஹர்லிகுயின், சீவர் பஞ்சவர்ணக்கிளிகள், டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்சு இறகுகிளி ஆகிய ஏழு அரிய வகை கிளிகள், கால்நடை மருத்துவர்களின் ஆய்வுக்குபின் வண்டலூர் உயிரியியல் பூங்காவில் புதிய வரவாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பூங்காவில் 61 உள்நாட்டு பறவையினங்கள், 28 அயல்நாட்டு பறவையினங்கள் என, மொத்தம் 89 வகையான பறவை இனங்களை சேர்ந்த 1604 பறவைகள் உள்ளதாகவும், புதிய பறவைகளின் வண்ணமிகு தோற்றமும், தனித்துவமான குரலும், பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்றும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.