ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இதுவரை தான் வகிந்து வந்த ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வான் டெர் லியன் ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின் போது 383 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வான் டெர் லியன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார். வான் டெர் லியன் அடுத்த 5 ஆண்டுகள் அந்த அமைப்பின் தலைவராக செயல்பட உள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் வகிந்து வந்த ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வான் டெர் லியன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைவரான அன்னெகிரெட் க்ராம்ப் கரன்பவுர் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
Discussion about this post