வடலூர் சத்தியஞான சபையில் வள்ளலார் தைப்பூச விழா

கடலூர் மாவட்டம் வடலூரில் வடலூர் சத்தியஞான சபையில் வள்ளலார் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூர் வந்து குவிவார்கள். இந்த ஆண்டு 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சத்தியஞான சபையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Exit mobile version