தேர்தல் அறிக்கையில் மக்களிடம் அளித்த வாக்குறுதிபடியே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறி இருந்ததாகவும், இது பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த பிறகே, அவர்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றும் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல கணேசன், அரசியல் உள்நோக்கத்தோடு தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
Discussion about this post