கடந்த ஒரு மாத காலமாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரம் கவலைகிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை சென்றனர். முன்னதாக நேற்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, வாஜ்பாயின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 93 வயதான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -எய்ம்ஸ் மருத்துவர்கள்
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா
- Tags: எய்ம்ஸ் மருத்துவர்கள்கவலைக்கிடம்வாஜ்பாய்
Related Content
நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு
By
Web Team
February 12, 2019
நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு
By
Web Team
February 12, 2019
தமிழகத்தில் வாஜ்பாய் வழியில் கூட்டணி தர்மம் : மோடி அழைப்பு
By
Web Team
January 11, 2019
டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு
By
Web Team
December 25, 2018
வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு
By
Web Team
December 24, 2018