வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

உடல் நலக் குறைவால் நேற்று காலமான அடல் பிஹாரி வாஜ்பாயின் உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் , முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பிற்பகல் ஒரு மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிகப்பட்ட பீரங்கி வண்டியில் வாஜ்பாய் உடல் ஏற்றப்பட்டு, முப்படையினர் அணிவகுப்புடன் இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்குகொண்டு செல்லப்படுகிறது. சாலையின் இருமருங்கிலும் திரண்டுள்ள பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பா... தேசியத் தலைவர் அமீத் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். யமுனை நதிக்கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் (smrithi sthal) என்ற இடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியில் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது. முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

 

 

Exit mobile version