1996ஆம் ஆண்டு மே மாதத்தில் இருவாரங்களும், அதன்பின் 1998 முதல் 2004 வரையிலும் நாட்டின் பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது ஆட்சிக்காலத்தில் தங்க நாற்கரச் சாலையும், கிழக்கு – மேற்கு, வடக்கு – தெற்கு முனைகளை இணைக்கும் வகையில் நால்வழிச்சாலையும் அமைக்கும் திட்டம் தொடங்கிச் செயல்படுத்தப்பட்டது.
குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகிய அவர் 2009ஆம் ஆண்டுக்குப் பின் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி அவர் காலமானார்.
வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post