தினகரனைத் தவிர, விலகிச் சென்ற மற்ற எம்.எல்.ஏக்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள தயார் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், அ.தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்களில், தினகரனைத் தவிர மற்றவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
தினகரனை தாங்கள் அழைக்கவில்லை, திசை மாறி சென்ற தொண்டர்களை மட்டுமே அழைத்ததாக அவர் தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கான பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறனார்.
அதோடு, தினகரன் அணியினர் குழப்பத்தில் இருப்பதாகவும், அந்த அணியில் இருக்கும் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, மனம் திருந்தி நாளை மீண்டும் வருவார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
Discussion about this post