புதுச்சேரியில் சபாநாயகர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் புதுவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து டெல்லியில் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதுவையில் சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்தார். இதனால் வைத்தியலிங்கம் புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
Discussion about this post