குழந்தைகள் மீதான பாலியல் இச்சையை தூண்டும் வகையில் பாடல் எழுதியதாக வைரமுத்து மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து எழுத்தில் இணையத்தில் வெளியாகி இருக்கும், “நாட்படு தேறல்” என்ற ஆல்பத்தில் வரும் “என் காதலா” என்ற பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் வரிகள் குழந்தைகள் மனதில் பாலியல் ரீதியான எண்ணத்தை விதைக்கும் விதமாக இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குழந்தைகளை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் நபர்களையும், பாலியல் துன்புறுத்தல் செய்யும் குரூர புத்தி கொண்டவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பாடல் வரிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பாடலை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்நிலையில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில், சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் புகார் அளித்துள்ளது.
ஏற்கெனவே mee too விவகாரத்தில் வைரமுத்து மீது, பாடகர் சின்மயி உள்ளிட்டோர் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post