ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, பாஜகவின் கைப்பாவையாக வைகோ செயல்படுவதாக குற்றம்சாட்டினார். வைகோவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க எவ்வளவு நேரமாகும் என மிரட்டல் விடுக்கும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ள அழகிரி, வைகோ யாருக்கு விசுவாசமாக இருந்ததில்லை எனவும் கடுமையாக தெரிவித்தார். காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ இவ்வாறு பேசியுள்ளது அவரை பச்சோந்தி என்பதை தோலுரித்து காட்டுகிறது என்றும் குற்றம்சாட்டினார். அழகிரியின் இந்தப் பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டணி முறியும் சூழல் உருவாகி உள்ளது.
Discussion about this post