வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா முருகன் கோயில்களில் குறிப்பாக அறுபடை வீடுகளில் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 9-ம் தேதி வடபழனி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் தினந்தோறும் தேர் பவனிகள் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றன. இந்நிலையில் இன்று வைகாசி விசாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் வந்த முருகரை திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம்பிடித்து வழிபட்டனர்.

வரும் 17-ம் தேதி ஆண்டவர் திருவீதி விழா, 18-ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் திருவிதீயுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

Exit mobile version