நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிமோனியா நோய் தடுப்பூசி மருந்துகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் கண்ணப்பன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதன் ஒருபகுதியாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post