தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், போதுமான அளவு தடுப்பூசி இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், அங்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சுவடே தெரியாத நிலை காணப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக ஏராளமானோர் ஆர்வத்துடன் திரண்டனர். தடுப்பூசி இருப்பு இல்லாததால், அனைவரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருப்பூரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தடுப்பூசி கிடைக்காமல் பலர் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.
அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் 18 முதல் 45 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆன்லைனில் இருப்பு இருப்பதாக தகவல் அளித்ததால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Discussion about this post