கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா மற்றும் வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி, மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் வெறும் 9 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post