254.52 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் மற்றும் 12.23 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் “பனமா நாட்டு கொடியுடன் எம்.வி. எலெட்ரா (ELETTRA) என்ற சரக்கு கப்பல் தனியார் நிறுவனத்திற்கு சரக்கு ஏற்றி வந்துள்ளது. 254.52 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் மற்றும் 12.23 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த பிரமாண்ட கப்பல் 93,353 டன் எடையுள்ள சுண்ணாம்புக் கல்லை ஏற்றி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று எம்.வி. என்பிஏ வேர்மீர் (NBA VERMEER) என்ற கப்பலின் மூலம் 89,777 டன் நிலக்கரி கையாளப்பட்டது.
தற்போது 93,353 டன் எடையை கையாண்டுள்ளது. இதன் மூலம் வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த ஆண்டு மட்டும் 9 லட்சத்து 55 ஆயிரம் டன் சுண்ணாம்புக் கல் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post