சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் நாட்டுப்பற்றை வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர், ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை நிறுவியவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை என பெருமிதம் தெரிவித்துள்ளார். சிறை சென்றபின்னரும், தன் போராட்டக் கொள்கைகளால், சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் விதைத்த வ.உ.சி-யின் நாட்டுப்பற்றை வணங்குவதாகத் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் செய்தியில், ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளும், ஆசிரியர் தினமுமான இன்று நல்ல மாணவர்களை உருவாக்கி, அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post