அண்ணா பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தால், தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பின்னடைவு ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற ஆராய்ச்சி படிப்புகள் சார்ந்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூசா திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக பல்கலைகலை கழகங்களின் மேம்பாட்டுக்காக 20 கோடி வழங்கப்பட்டு வந்ததாக கூறினார். தமிழகத்தில் 10 பல்கலைகலகழகங்களில் ஆராய்ச்சி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைகழகத்திற்கு 100 கோடி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்
Discussion about this post