உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேச ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், ஹரித்வார் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக டேராடூனில் 8 சென்டி மீட்டர் மழையும், சமோலி மற்றும் முக்தேஷ்வரில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ராம்கங்கா, விக்டோரியா உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுவதுமாக நிரம்பியதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஹரித்வாரின் ரிஷ்கேஷ் எனும் இடத்தில் உள்ள கங்கை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோர மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.