அனுமன் குறித்து அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அனுமன் ஒரு தலித் என்று பேசியதாக கூறப்படுகிறது.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக, காங்கிரஸ் சார்பில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பக்தர்களின் மனதை யோகி ஆதித்யநாத் புண்படுத்தியுள்ளதாக, ராஜஸ்தான் சர்வ பிராமின் மகாசபா சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் யோகி ஆதித்ய நாத்தின் கருத்துகள் திரித்து விட்டதாக பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர்.
Discussion about this post