இலவச மின்சாரத்தை எதிர்பார்க்காமல், சூரிய ஒளி மின்சாரத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று, விவசாயி ஒருவர் வலியுறுத்தி உள்ளார். கடலூர் மாவட்டம் விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணிமாறன். இவர், தமிழ்நாடு வேளாண்துறை மூலம் மானியம் பெற்று சூரிய சக்தி பேனல்களை நிறுவி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக அரசின் 100 சதவீத மானியத்தின் மூலம் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இதன் மூலம் நல்ல மகசூல் கிடைப்பதாகவும், அனைத்து விவசாயிகளும் இலவச மின்சாரத்தை எதிர்பார்க்காமல், சூரிய சக்தி மின்சாரத்திற்காக அரசு அளிக்கும் மானியத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விவசாயி மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post