பிஃபா உலக கோப்பை பெண்கள் கால்பந்துப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அமெரிக்க 4-வது முறையாக வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
பிரான்சில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை அமெரிக்கா எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் அமெரிக்க கேப்டன் ரூபினோ தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா முன்னணி பெற்றது.
பின்னர் 69 நிமிடத்தில் அமெரிக்காவின் ரோஸ் லாவெல்லே மற்றொரு கோல் அடிக்க 2-0 என்றக் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஏற்கனவே 1991, 1999 மற்றும் 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற அமெரிக்கா 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Discussion about this post