சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்கேற்று வரும் அமெரிக்கப்படைகளும், ரஷ்யப் படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும் போரிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும், அதிநவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் ஒருபோதும் நேரடி யுத்தத்தில் இறங்கியதில்லை
இந்நிலையில் இருநாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சிரியாவும் சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ராணுவ வாகனத்தின் மீது ரஷ்யாவின் ராணுவ வாகனங்கள் மோதின. மேலும் அமெரிக்க படையினரை மிரட்டும் வகையில் ரஷ்யாவின் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றும் மிக அருகில் பறந்தது. இந்த மோதலில் அமெரிக்க வீரர்கள் சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ரஷ்ய அதிகாரிகள் ஊடகங்களில் வெளியிட்ட பின்னரே இந்த சம்பவம் குறித்து வெளியுலகிற்கு தெரியவந்தது. ரஷ்யப் படையினர் தான் போர் ஒப்பந்தத்தை மீறி தங்கள் பகுதியில் நுழைந்ததாக அமெரிக்காவும், அமெரிக்காவின் மீது ரஷ்யாவும் பராஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post