இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
துணை ராணுவப்படை வீரர்கள் 40 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களை தாக்கி அழித்தன.
இந்த நிலையில் இந்திய விமானப்படையை சேர்ந்த மிக் 21 ரக விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி அபிநந்தன் என்பவர் பாகிஸ்தானிய படைகளிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது
Discussion about this post