ஈரானுடன் முன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. குறிப்பாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கியிருந்த தற்காலிக அனுமதியை அமெரிக்கா ரத்து செய்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் ஈரானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரானுடன் முன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அதேசமயம் ஈரானின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுவதை அமெரிக்கா கைவிடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கா வார்த்தை ஜாலம் காட்டுவதாக கூறி அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
Discussion about this post