4 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டிரம்ப்பின் வருகையையொட்டி ஜப்பானில் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வை சந்தித்து பேசும் டிரம்ப், இருநாட்டு வர்த்தகம், மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேளாண் பொருட்களுக்கு ஜப்பானில் வரிசலுகையை எதிர்பார்க்கும் அமெரிக்கா, ஜப்பான் கார்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தும் முடிவை சமீபத்தில் கைவிட்டது. இந்தநிலையில் ஜப்பான் சென்றுள்ள டிரம்ப், இதுதொடர்பாக வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இதனிடையே, ஜப்பானில் நடைபெற்ற மல்யுத்த போட்டியை கண்டுகளித்த டிரம்ப், அதில் வெற்றி பெற்ற அசானோயாமா என்ற மல்யுத்த வீரருக்கு கோப்பையை வழங்கினார். ஜப்பானில் சுமோ மல்யுத்த போட்டியை கண்டுகளித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post