பிரதமர் மோடி, வரும் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, இந்தியாவுக்கான ஆதரவை பெருக்கும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post