அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், அமெரிக்காவும், இத்தாலியும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கும் நிலையில், இன்னும் 2 வாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டுள்ள அவர், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்க மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post