அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு விருந்து நடைபெற்றுள்ளது. இதில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பங்கேற்ற நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், சுமார் 13 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 16 வயதிலிருந்து 48 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்த அந்நாட்டு காவல்துறையினர் அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரையும் தேடி வருகின்றனர்.
Discussion about this post