ஜம்மு-காஷ்மீரில் 370 வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், காஷ்மீரில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேசிய அதிபர் டிரம்ப், இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தவிர்க்குமாறும், நிலமைமை மோசமாவதை இரு நாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post