அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ஒத்தழைப்பு நிறுவமான DSCA வெளியிட்டுள்ள அறிக்கையில், அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க ஒப்புதல் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 பில்லியன் டாலருக்கு இந்த ரக துப்பாக்கிகளும் அதை சார்ந்த உபகரணங்கள் இந்தியாவிடம் விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது கடற்படையின் பலத்தை வலுப்படுத்த முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயதம் மற்றும் வெளியுறவுக் கொள்கை படியே இந்தியாவிற்கு இந்த ரக துப்பாக்கிகள் விற்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post