ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

வரும் 30-ம் தேதி அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள ஜி இருபது மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, ஆண்டுக்கு 250 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நாட்டின் அதிபர் டிரம்ப் வரி விதித்தார். இதனால், அதிருப்தியடைந்த சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆண்டுக்கு 110 மில்லியன் டாலர் வரி விதித்தது. இந்த வர்த்தக போரால் இரு நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் நகரில், வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜி இருபது மாநாடு வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில், சீனா அதிபர் ஜின்பிங் – அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டு, தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version