உலகம் முழுவதிலும் உள்ள பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர். இந்நிலையில், அவர்களின் தொலைபேசி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில், வெளியில் கசிந்துள்ள பல தகவல்கள் போலியானவை என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.