ஒரே நாளில் 91 செ.மீ மழை கொட்டி தீர்த்து சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவலாஞ்சி, மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ளது. இது பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.
இப்பகுதிக்கு கோயம்பத்தூரில் இருந்து வெள்ளியங்கிரி அணைக்கட்டு வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைப் பாதை வழியாகவும் செல்ல முடியும். அவலாஞ்சியில் குடியிருப்புகள் ஏதும் கிடையாது. இருப்பது வெறும் காடு மட்டும் தான். காட்டுச் செடிகளின் இலை நுனிகளில் சேகரமாகியிருக்கும் நீர்த்துளிகளும், தானே உருவாக்கிக்கொண்ட மலைவழிப்பாதையில் தாவிப்படர்ந்து ஓடிவரும் காட்டு ஓடையுமாக அவலாஞ்சி காட்சியளிக்கும்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்துள்ளது. இதனால், அவலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொலைநோக்கு பார்வையாக, இங்குள்ள வனப்பகுதியில் சுற்றுச்சூழல் சுற்றுலா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையின் தென்மேற்கு திசையில் உள்ள அவலாஞ்சி பகுதியானது, எமரால்டு அணையையும், பில்லூர் அணையையும் நேரடியாக இணைக்கும் நீர்ப்பாதையாகும். இந்த அணைகளின் நீரே குந்தா, கெத்தை அணைகளின் வழியாக பவானி ஆற்றில் கலந்து, பவானிசாகர் அணையை சென்றடைகிறது.
கடந்த வருடம், நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைகளை தூர்வாரி பராமரிக்க தமிழக அரசு சுமார் 230 கோடியை ஒதுக்கி பணியை மேற்கொண்டது. இதன்மூலம் தூர்வாரப்பட்ட, குந்தா நீர் மின் நிலைய அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதே போல், அவலாஞ்சி, இத்தலார், எமரால்டு மற்றும் அப்பர்பவானி அணைகள் தூர்வாரி பராமரிக்கப்பட்டதன் காரணமாக, நாள் ஒன்றுக்கு 350 முதல் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளும் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் ஒத்துழைப்போடு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், தமிழக அரசின் சிறப்பான திட்டத்தால், மின் உற்பத்தியும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.
Discussion about this post