பல்கலைக்கழகங்கள் அரசியல் களமாக மாறுவதை மத்திய அரசு என்றும் அனுமதிக்காது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சிறு சிறு பிரச்னைகளிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதை மத்திய அரசு தொடர்ந்து அனுமதிக்காது என்று கூறினார். பல்கலைக்கழகங்கள் அரசியல் களமாக மாறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும், மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கல்வி கற்பதற்கான இடமாகவும், சமூகம் மற்றும் நாட்டின் முதுகெலும்பாகவும் பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன என கூறிய அவர், பல்கலைக்கழகங்களில் கல்வி தொடர்பான விவகாரங்களில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாடு முழுவதும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு சிறந்த சூழல் காணப்படுகிறது எனவும் கூறினார்.
Discussion about this post