அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் சந்திப்பு வியட்நாம் தலைநகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு இருநாடுகள் மட்டுமின்றி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டும் ஒரு தொடக்கமாக அமைந்தது. ஆனால், ஆக்கப்பூர்வ முடிவுகள், அப்போது எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இரு அதிபர்களும் மீண்டும் சந்தித்து பேச, முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீண்டும் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
Discussion about this post