கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள நான்காவது கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்துகளை கேட்டறிந்தார். அனைவரையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்தார். அனைத்து மாநில முதலமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளது.
Discussion about this post