இந்தி பிரச்சார சபாவின் தலைவராக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தேர்வு செய்யப்படதையடுத்து, தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபையில் அதன் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறினார். யார் மீதும் இந்தியைத் திணிக்க வேண்டிய தேவை மத்திய அரசுக்கு இல்லை என்று கூறிய முரளிதரன், பிரதமர் மோடி இந்தியை நேசிப்பது போல் தமிழையும் நேசிப்பதாகத் தெரிவித்தார்.
Discussion about this post