பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
டெல்லியில் உள்ள பாராளுமன்ற இணைப்பு புதிய கட்டடத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற இருக்கும் அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
விவசாயம், ராணுவம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துதல் குறித்து இதில் விவாதிக்கப்படயிருக்கிறது. மேலும் அமைச்சரவைக் கூட்டமும் இங்கு நடைபெறுவதால், அக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post