பரபரப்பான சூழலில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் 2 நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பினர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை, வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதனிடையே, டெல்லியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.